மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை - பல போராட்டத்திற்கு பிறகு பிடிபட்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை - பல போராட்டத்திற்கு பிறகு பிடிபட்ட சம்பவம்.!!

கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு அருகே சின்னகானல், சூரியநெல்லி, பூப்பாறை உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மக்களை அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து பயமுறுத்தி வந்தது.

அதாவது அரிக்கொம்பன் ஊருக்குள் புகுவதும், சாலையோர கடைகளில் உள்ள பொருட்களை சேதபடுத்தி கடையை உடைப்பதும், தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களை விரட்டுவதும், குடியிறுப்பு பகுதிகளில் வலம் வந்து மக்களை அச்சுறுத்துவதும் என்று பொதுமக்களின் நிம்மதியை குலைத்து வந்தது.  

அதனால், யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தையடுத்து வனத்துறையினர் கும்கி யானை உதவிகளுடன் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவைக் கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால், யானையை பிடிப்பது தொடர்பாக ஒரு உயர்மட்ட குழுவை நீதிமன்றம் நியமித்தது.

இந்த உயர்மட்ட குழு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பரிந்துரை செய்ததையடுத்து 150 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள், ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் உள்ளிட்டோர் மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக அரிக்கொம்பன் யானையை தேடி வந்தனர். இந்த நிலையில் யானை சின்னக்கால் அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை சிமெண்ட் பாலம் பகுதி வழியாக கொண்டு வந்து, மயக்க ஊசி செலுத்தி அதன் கால்கள் கட்டப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை வாகனத்தில் ஏற்றி அதனை குமுளி பகுதிக்கு கொண்டுவந்து தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கூடலூர் அருகே வனப் பகுதியில விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் யானையை வனப்பகுதியில் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எண்ணிய மாவட்ட நிர்வாகம் குமுளி மற்றும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மேலும், யானை மயங்கிய நிலையிலேயே வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 ban on kumuli for arikomban elephant release to forest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->