சகோதரிக்காக 21 வயது இளைஞனை கொன்ற பதினாறு வயது சிறுவன்..!  - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தை சேர்ந்த இருபத்தொரு இளைஞனை அதே கிராமத்தை சேர்ந்த பதினாறு வயது சிறுவன் கொடூரமான கொலை செய்துள்ளான். இந்த கொலை சம்பவம் கடந்த வருடம் 2019 மார்ச் 21-ம் தேதி நடந்துள்ளது.

தனது சகோதரியை இருபத்தொரு வயதுடைய இளைஞன் காதலிப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அந்த இளைஞனை பதினாறு வயதுடைய சிறுவன் கொலை செய்துள்ளான். கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடல் பாகங்கள் 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பதினாறு வயதுடைய  சிறுவனை கைது செய்து, அந்த சிறுவனை கோடா மாவட்ட சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கு தொடபான விசாரணை கோடா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் பத்தொன்பது வயதான கொலையாளிக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கொலையாளிக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 years young man kill 21 years young man


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->