பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு !! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோட்டோர கடையில் பானி பூரியை சாப்பிட்ட 17 வயது சிறுவன் புட் பாய்சனால் உயிரிழந்தார். அந்த சிறுவன் கடந்த ஜூன் 7ஆம் தேதி அன்று தனது பகுதியில் உள்ள ஒரு ரோட்டு கடையில் இருந்து பானி பூரி மற்றும் பிற துரித உணவு பொருட்களை உட்கொண்டார். 

இதனால், அந்த சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, பிறகு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக கூறப்படுகிறது.

சிறுவனின் மரணத்திற்கு பானி பூரி தான் முக்கிய காரணம் என அவரது பெற்றோர் கூறியதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திங்கள்கிழமை உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதை பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் சி தர்மராஜ் கூறுகையில், "பயாப்ஸி அறிக்கை மூலம் மரணத்திற்கான காரணத்தை அறிய முடியும் என்றும், தடயவியல் குழு ஏற்கனவே விஷப் பரிசோதனைக்காக உள்ளுறுப்பு மாதிரிகளை சேகரித்துள்ளது" என்றும் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old boy died by food poisoning


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->