சென்னை || பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். வழக்கறிஞரான இவர், நேற்று மாலை தனது வீட்டின் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் பேக்கரியில் தனது குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைக்கும் டோனட் கேக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளார். 

இதனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவர் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதற்கிடையே வீட்டில் மீதம் இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர்கள் சோதனை செய்ததில் கேக்குகள் பூரணம் அடைந்து இருந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்கு சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்துள்ளார். 

இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பேக்கரியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 childrens admitted hospital for eat donut cake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->