வேலூரில் 2 போலி மருத்துவர்கள் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் போலி மருத்துவர்கள் பலர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் வேலூர் சுகாதாரத்துறையினர் இன்று சத்துவாச்சாரியில் உள்ள பல கிளினிக்குகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விஜயராகவபுரத்தில் வெங்கடேசன் என்பவரும் ரங்காபுரத்தில் தயாளன் என்பவரும் ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் நடத்தி வந்த கிளீனிக்கில் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருந்து மற்றும் மாத்திரைகளை  பறிமுதல் செய்த சுகாதாரத் துறையினர். இரண்டு கிளினிக்குகளுக்கும் சில் வைத்ததோடு சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 fake doctors arrested in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->