#தென்காசி || காய்ச்சலால் சிறுமிகள் உயிரிழப்பு.. சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


காய்ச்சலால் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரியா (8). காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த  பூமிகா எர்ன்ற சிறுமியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்தர்கள் அடுத்து அடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் அந்த பகுதியை ஆய்வு செய்தனர்.அந்த பகுதி மக்களுக்கு வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

குடிநீர் தேக்க தொட்டிசரிவர சுத்தம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 girls death in Fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->