கோவை || கியாஸ் கசிந்து பயங்கர தீ விபத்து - 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பிள்ளையப்பம் பாளையத்தில் உள்ள தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்காக தொழிற்சாலையில் எதிர்ப்புறத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தொழிற்சாலையின் எதிர்ப்புற குடியிருப்பில் வசித்து வந்த அனுராக் சிங்(28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேரும் சமையல் செய்துள்ளனர்.

அப்பொழுது கியாஸ் கசிந்து எதிர்பாராதவிதமாக அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ஐந்து பேரும் பலத்த தீக்காயமடைந்தனர். இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஐந்து தொழிலாளர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த அனுராக் சிங், தன்ஜெய்ங் ஆகிய இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 north state workers killed in Gas leak and fire in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->