தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 75 வயது முதியவர் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையின் காரணமாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள கொரோனாவாட்டில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதே போன்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people died due to Corona in TamilNadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->