#சேலம் || வாக்கு செலுத்த வந்த "2 பேர்" மயங்கி விழுந்து பலி.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 77 வயதாகும் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். 

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் தெளித்து மூதாட்டியை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் சுயநினைவின்றி கிடந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி சின்னபொண்ணு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

அதே போன்று சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாக்களிக்க சென்ற சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற 65 வயது முதியவர் தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தனது ஜனநாயக கடமை ஆற்று வந்த இருவர் மயங்கி விழுந்து வாக்குச்சாவடியில் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons died in polling booth in Salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->