#சென்னை || டெங்குவுக்கு 2 வயது பெண் குழந்தை பலி!! மருத்துவமனை மீது பரபரப்பு புகார்!!
2 year old girl died due to dengue in rela hospital Chennai
சென்னையில் மழைக்காலம் தொடங்கியது முதல் குழந்தைகளும் சிறுவர்களும் மர்ம காய்ச்சலுக்கு தொடர்ந்து பலியாகி வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சென்னை மதுரவாயிலை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியானார்.
அதேபோன்று சில நாட்களுக்கு முன்பும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 10 லட்சம் ரூபாய் செலுத்துமாறு ரேலா மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என பெற்றோர்களும், உறவினர்களும் கூறியவுடன் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரேலா மருத்துவமனை நிர்வாகம் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், குழந்தை மருத்துவமனைக்கு வந்ததுமே உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தோம் எனவும், வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
English Summary
2 year old girl died due to dengue in rela hospital Chennai