ராணிப்பேட்டை: போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு வாலிபர்கள் போலி நகைகளை அடகு வைத்து ரூபாய் 14 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (31), அஜித்(22). இவர்கள் இரண்டு பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் முலாம் பூசிய 45 பவுன் தங்க போலி நகைகளை வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 14 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர்.

இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வருடாந்திர ஆய்வு தணிக்கை செய்த போது, பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பேரும் அடகு வைத்த நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 young mans arrested for swindling Rs 14 lakh by pawning fake jewellery in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->