2021ஆம் ஆண்டு கலையிழந்த பல பண்டிகைகள்.! மகிழ்ச்சி தந்த புதிய திட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றும் வைபவம், கோகுலாஷ்டமியில் கண்ணனுக்கு செய்யும் அபிஷேக அலங்காரம் மற்றும் ஊஞ்சல் சேவை, விநாயகர் சதுர்த்தியன்று செய்யும் கொழுக்கட்டை மற்றும் அனைத்து தெருக்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு, அந்த விநாயகரை மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாளில் ஆற்றிலோ அல்லது கடற்கரையிலோ கரைப்பது,

 மகாளயபட்சத்தில் முன்னோர்களுக்கும், பித்ருக்களுக்கும் சிரார்த்தம் செய்வது, நவராத்திரி தொடங்கியதில் இருந்து இறுதி நாள் வரை அம்மனுக்கு செய்யும் விதவிதமான அலங்காரங்கள், கொலு வைத்து கூட்டுப் பிரார்த்தனை செய்தல், ஆயுத பூஜை, விஜய தசமி நாட்களில் செய்யும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தல்,

அனைவராலும் வெகு சிறப்பாகவும், விமர்சையாகவும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒன்றுசேர்ந்து அதே நேரம் மிகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடக்கூடிய ஒரே பண்டிகை என்றால் அது தீப ஒளி திருநாள் (தீபாவளி) தான். அதிலும் கட்டுப்பாடுகள் விதித்து குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அந்நாட்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை என எத்தனை கட்டுப்பாடுகள்?

அடுத்து சூரசம்ஹாரம் என்றால் முருகன் கோவில்களில் இடம் இல்லாமல் அனைத்தும் மக்கள் கூட்டமாகவே இருக்கும். ஆனால் 2021ஆம் வருடத்திலோ... எப்படி என்று உங்களுக்கே தெரியும்...!

 கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம் ஆகியவைகளை முன்போல் அல்லாமல் எப்படி வீட்டில் இருந்தபடியே ஆரவாரமின்றி கடைபிடிக்க வேண்டும் என்பதை எல்லோரும் கற்றுக்கொண்டோம் அல்லவா?

 பௌர்ணமி நாட்களில் கிரிவலம், விடுமுறை நாட்களில் கொண்டாட்டம், பண்டிகை நாட்களில் கூட்டம் என எத்தனை விஷயங்களை நாம் இந்த வருடத்தில் தியாகம் செய்தோம் என எண்ணிப் பாருங்கள்...

நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021ஆம் ஆண்டு விடைபெற போகிறது. இந்த வருடத்தில் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள், சோக விஷயங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் தமிழக அரசு கொண்டு வந்த 'அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை அள்ளி தந்துள்ளது.

 இவை அனைத்தும் இன்னும் சில நாட்களே... பிறக்க இருக்கும் புது வருடம் நம் ஏக்கங்களையும், பிரார்த்தனைகளையும் கட்டாயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்...!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2021 indian festivals


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->