வாரத்தின் முதல் நாளே 21 மின்சார ரெயில்கள் ரத்து - அதிர்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது அந்த வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். அந்த வகையில், இந்தமுறை சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21 மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே தெரிவித்து இருப்பதாவது:- "சென்டிரலில் இருந்து நாளை காலை 5.40, 8.35, 10.15 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.45, மதியம் 12.35, 1,15 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து நாளை காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, மதியம் 12, 1 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும், ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதன் காரணமாக 17-ந் தேதி மட்டும் சென்டிரல்-பொன்னேரி இடையே காலை 9 மணிக்கும், சென்டிரல்-மீஞ்சூர் இடையே காலை 9.30, 10.30 மணிக்கும், மீஞ்சூர்-சென்டிரல் இடையே காலை 11.56, மதியம் 1.31 மணிக்கும், பொன்னேரி-சென்டிரல் இடையே மதியம் 12.18 மணிக்கும், சென்டிரல் -எளாவூர் இடையே காலை 11.35 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 electric train cancelled in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->