தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு.. எந்த மாநகராட்சிக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.

தமிழகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதியாக ரூ.25 லட்சத்தை சேலம் மாநகராட்சிக்கு வழங்குகிறார்.

அதேபோல், நடப்பாண்டு சிறந்த நகராட்சிக்கான முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.15 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 lakh prize announcement for the best corporation in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->