தூத்துக்குடி: மினிலாரி கவிழ்ந்த விபத்தில் 26 ஆயிரம் வாத்து முட்டைகள் உடைந்து சேதம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 26 ஆயிரம் வாத்து முட்டைகள் உடைந்து சேதமானது.

நேற்று இரவு தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

அப்பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள மேம்பாலத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26 ஆயிரம் வாத்து முட்டைகள் உடைந்து சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இரண்டு பேரும் எவ்வித காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புதூர் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 thousand duck eggs damage in tha mini lorry accident in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->