என்.எல்.சி வேலை வழங்கியதில் குளறுபடி.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
28 Northerners work in NLC who were not given land
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்திற்கு வீடு மற்றும் விளைநிலங்கள் கொடுத்தவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்தப்படி நிரந்த வேலை மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி என்எல்சி நிறுவனம் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோன்று நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கிய பட்டியல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
அதன்படி 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 862 பேருக்கு வேலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 28 வட இந்தியர்களின் பெயர் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் என்எல்சி நிறுவனத்திடம் அதே பகுதியைச் சேர்ந்த நபர் கேட்ட கேள்விக்கு என்எல்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் வந்த கோப்பின்படி பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் என்எல்சி நிறுவனம் அனல் மின் நிலையம் மற்றும் நிலக்கரி சுரங்கத்தை அமைத்துள்ளது. அந்தப் பகுதிகளில் நிலம் கொடுத்தவர்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வேலை வழங்கப்பட்டு இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
English Summary
28 Northerners work in NLC who were not given land