மருத்துவர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 சவரன் நகை கொள்ளை.! 4 கொள்ளையர்கள் துணிகரம்.!!
280 pound jewelry robbery
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் சக்திவேல், இவரது மனைவி ராணி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்கள் நாகனம்பட்டி புறவழி சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சக்திவேல் உடன் அவரது தந்தை வெண்ணியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர். பின்னர் இருவரும் தங்கள் அறையில் தூங்க சென்று விட்டனர். சக்திவேலின் பெற்றோர்கள் வழக்கம்போல் வீட்டுக்குப் பின் புறம் உள்ள செட்டில் தூங்க சென்று விட்டனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மருத்துவர் சக்திவேல் வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து நான்கு பேர் உள்ளே வந்து உள்ளனர். வீட்டுப் பின்புறம் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல் தாய் மற்றும் தந்தை கட்டி போட்டனர். அதன்பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று சக்திவேல் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு அறையாக சென்று பீரோவைத் திறந்து அதில் இருந்து 280 பவுன் சவரன் நகை மற்றும் ரூ. 25 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துச் கொண்டனர். எதுவும் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறினர். வாசலில் நின்று கொண்டு காரில் கொள்ளையடித்த நகை, பணத்துடன் அந்த கும்பல் தப்பி சென்றது.
அதன்பிறகு காலை 4 மணி வரை சக்திவேல் அறைக்குள்ளேயே போராடி தனது கை கட்டை கழட்டினார். அதன்பிறகு ஒட்டசத்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் 4 பேரும் முக கவசம் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயது உடையவர்கள் என சக்திவேல் தெரிவித்துள்ளார்.
English Summary
280 pound jewelry robbery