வங்கக் கடலில் உருவான மோக்கா புயல்..! 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.!
2nd number of 9 ports storm warning cage loading instructions for mocha storm
மோக்கா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. இது இன்று இரவு தீவிரப் புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுபெறும்.
இதையடுத்து வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
2nd number of 9 ports storm warning cage loading instructions for mocha storm