கடலூர்: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். நேற்று இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சோமசுந்தரம் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 

இதில் இடிபாடுகளுக்குள் சோமசுந்தரம், அவரது மனைவி நிர்மலா, மகன் அய்யப்பன் ஆகியோர் சிக்கினர். இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டனர்.

பின்பு காயமடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து டி.புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people injured house wall collapsed due to heavy rain in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->