என்.எல்.சியில் மீண்டும் விபத்து.! 30 பேர் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு என்எல்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப் பகுதி வேலைக்காக தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகிய வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் சில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 people injured NLC worker carrying vehicle met accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->