37 நபரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்தா!!! சேலம் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் நடவடிக்கை...
37 peoples driving licenses temporarily revoked Salem traffic officials take sudden action
சேலம் போக்குவரத்து சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்கப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிக்னலை மீறுவது ,அதிகப் பாரம் ஏற்றுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது ,சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் மட்டும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

போக்குவரத்து துறை அதிகாரிகள்:
மேலும் அனுமதி மற்றும் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் விதிமீறல் காரணமாக நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் எடுத்தைக் இதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் வியப்படைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து சேலம் மக்கள் காவலர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
37 peoples driving licenses temporarily revoked Salem traffic officials take sudden action