ரூ.500 கோடி கடன் தருவதாக ரூ.12.6 கோடி அபேஸ்.!! வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது.!!
3persons arrested Rs12 crore fraud claiming to get Rs500 crore loan
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு 500 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 12.6 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் தனியார் வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜன் பாபு. இவர் தனக்கு 500 கோடி ரூபாய் கடன் வேண்டுமென்று சென்னை அண்ணா நகரை சேர்ந்த சரவணன் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது தனக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் 500 கோடி ரூபாய் கடனாக கொடுப்பதாக தெரிவித்ததோடு கமிஷனாக 12.6 கோடி ரூபாயை சேத்துப்பட்டில் உள்ள தனியார் வங்கி மேலாளர் பாலாவிடம் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் 500 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராஜன் பாபு 12.6 கோடி ரூபாய் காண காசோலை கொடுத்துள்ளார். ஆனால் கடன் தொகை வராததால் சந்தேகம் அடைந்த ராஜன் பாபு சரவணன் தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்காததை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வங்கி மேலாளர் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சரவணனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதே போன்ற வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளனரா.? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3persons arrested Rs12 crore fraud claiming to get Rs500 crore loan