சென்னையில் பரபரப்பு... ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டதில் 40 பேர் மயக்கம்..!!
40 teachers who dizziness occurred continuous hunger strike in Chennai
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதன் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருந்து வருகிறது. இதனை சரி செய்யக்கோரி பல வருடங்களாக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர் பலகட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கடந்த டிச.27ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளை எட்டி உள்ள நிலையில் இன்று 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை அடுத்து மயக்கம் அடைந்த அனைத்து ஆசிரியர்களும் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
40 teachers who dizziness occurred continuous hunger strike in Chennai