வசூலை வாரி குவித்த மதுபானக் கடைகள் - இந்த வருடம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது மதுபானக் கடைகள்தான். அதிலும் குறிப்பாக  தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.

அதன் படி ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு மதுபானக் கடைக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி நடைபெற்ற மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மதுரை-ரூ.52.73 கோடி, சென்னை-ரூ.48.12 கோடி, கோவை-ரூ.40.20 கோடி, திருச்சி-ரூ.40.02 கோடி, சேலம்-ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இதேபோல், நேற்று 12ம் தேதி நடைபெற்ற மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி-ரூ.55.60 கோடி, சென்னை-ரூ.52.98 கோடி, மதுரை-ரூ.511.97 கோடி, சேலம்-ரூ.46.62 கோடி, கோவை-ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 464 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 467 கோடிக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

467 crores liquar bottles sales in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->