5 பேர் உயிரிழப்பு விவகாரம்! - இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் பல்வேறு காவல் நிலையங்களில் பாய்ந்தது வழக்கு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி இந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.  காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை சிறப்பாக நடைபெற்றது. இந்திய விமானப்படை நிறுவனம் 93-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விமான சாகசத்தில், முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், சுமார் 230 பேர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். இதில், 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம்  தொடர்பாக சென்னை அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people died in the matter the case flowed in various police stations in the category of unnatural death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->