இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.

அதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 160-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு இலங்கையிலிருந்து கள்ளத்தோணி வந்துள்ளனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Srilanka refugees comes to tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->