நீலகிரி: பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவி... 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...!
5 teachers suspended for helped students write answers in Plus 2 maths exam in nilgiri
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 கணிதத் தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் 27ஆம் தேதி நடைபெற்ற கணித தேர்வில், அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் ஒரு சில மாணவ-மாணவிகளுக்கு விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கணித தேர்வில் விடை எழுதுவதற்கு ஒரு சில மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உதவிய, முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன், செந்தில் மற்றும் அரை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி ஆகிய ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
English Summary
5 teachers suspended for helped students write answers in Plus 2 maths exam in nilgiri