தலைவர்கள் பிறந்தநாள் - மாணவர்களுக்கு 5000 பரிசுத்தொகை.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் உள்ளிட்டோரின் பிறந்தநாளை முன்னிட்டு 20.08.2024, 21.08.2024 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டிகள் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- வாய்மையே வெல்லும், ஏழையின் பள்ளி சிரிப்பில் இறைவனைக் காணலாம். காஞ்சித் தலைவன், அண்ணாவின் தமிழ்வளம், மாணவர்க்கு அண்ணா. இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு-எழுத்தாளராக அண்ணா, அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் மேடைத்தமிழ்.

தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு – தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும், வைக்கம் வீரர், சுயமரியாதை இயக்கம். இனிவரும் உலகம். இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு- தன்மானப் பேரொளி, தெற்காசியாவின் சாக்ரடீஸ், வெண்தாடி வேந்தர், சமுதாய விஞ்ஞானி பெரியார், தொண்டு செய்த பழுத்த பழம்.

இந்தப் பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். ஆகவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இந்தப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5000 prize to school and college students for anna and periyar birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->