சேலம் || வீட்டில் சிலிண்டர் வாயுக்கசிவால் தீ விபத்து - 6 பேர் காயம் - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வாய்வுக்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நெத்திமேடு பெருமாள் கரடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சுதாகர். இவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சுதாகர், அவரது மகள் உட்பட வீட்டிற்கு வந்த உறவினர்கள் என மொத்தம் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

இதையடுத்து காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 injured in fire accident due to cylinder gas leak in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->