Krishnagiri: மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளதால் காட்டு யானைகள் இடம்பெறுவது வழக்கம். 

சில நேரங்களில் இடம் பெயரும் காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இதற்காக வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தன பள்ளி ஏரியில் நீரைத் தேடி 6 வயது மதிக்கத்தக்க மக்னா‌ யானை‌ வந்துள்ளது 

அப்போது ஏரி பகுதியில் மிகவும் தாழ்வான மின்கம்பத்தில் இருந்த கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி ஆறு வயது மக்னா யானை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது வெயில் காலம் என்பதால் யானைகள் நீரை தேடி ஊருக்குள் வரக்கூடும் என்பதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 year old Magna elephant died in Krishnagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->