#BREAKING : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் இடையே போட்டி - வேதாந்தா நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் உள்ள 'ஸ்டெர்லைட்' ஆலையை வாங்க பலர் முன்வந்திருப்பதாகவும், அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருவதாகவும் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ல், துாத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆலையை மீண்டும் துவங்குவதற்கு, சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது வேதாந்தா. 

இந்நிலையில், திடீரென ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கடந்த மாதம் வேதாந்தா, விளம்பரங்கள் வாயிலாக அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது ஆலையை வாங்குவதற்கான ஏலத்தில் கலந்துகொள்ள, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக, வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, வேதாந்தா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் துகல் தெரிவித்திருப்பதாவது : "ஆலையை வாங்குவதற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது சுற்றுச்சூழல் பிரச்னை அல்ல; சமூக பிரச்னை சம்பந்தமானது என்பதால், எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் முயற்சிக்கிறோம். இருப்பினும், ஆலையை மீண்டும் திறப்பது குறித்த சாதகமான ஆணை கிடைப்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 companies interested in buying Tuticorin Sterlite plant Vedanta company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->