#BREAKING || தமிழகம் முழுவதும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழகம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த செந்தில் ராஜின் பணியிட மாற்றமும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மேலாண் இயக்குனராக வினித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 IAS officers transferred across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->