வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! சிதறி போன உடல்கள்? தமிழகத்தையே உலுக்கிய அடுத்த சோகம்! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு ஆலையில் இன்று காலை 20க்கும் மேற்பட்டோர் பணிக்காக வந்த நிலையில் அந்த ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து காரணமாக தற்போதுவரை 7 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் லேசான காயத்துடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ விபத்தில் பட்டாசு ஆலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் 7 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின.

இந்த வெடி விபத்தில் உடல்கள் சிதறி கிடப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலையில் உள்ளே 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் வெடித்து வருவதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளியில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் நிகழ்ந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 14 பேர் உயர்ந்த சோகம் மறைவதற்குள் தற்போது அரியலூரில் பட்டாசு ஆலை வெடித்து சிதறி இருப்பது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people died until now in ariyalur firecracker factory explosion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->