போதைக்காளான் விற்பனை - கொடைக்கானலில் 7 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதைக்காளான், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு போலீசார், கடந்த இரண்டு நாட்களாக விடுதிகள், காட்டேஜ்கள், டெண்ட் ஹவுஸ்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல வாகன சோதனையும் செய்தனர். இந்தத் தீவிர விசாரணையில், போதைக்காளான் விற்றதாக கொடைக்கானல் மன்னவனூரை சேர்ந்த ரகுபதி, கல்லறை மேடு பாண்டியராஜன், அன்னை தெரசா நகர் பிரதீப், பாம்பார்புரம் மணி, ஆரோக்கியதாஸ், மதுரை மாவட்டம், மேலூர் சூர்யா, ஊமச்சிகுளம் மகேஸ்வரன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர். 

மேலும் போதைக்காளான் வாங்க வந்த கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10 சுற்றுலாப்பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது, போதைக்காளான் விற்பது சம்பந்தமான சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு இதுபற்றி வீடியோ வெளியிடும் நபர்களின் வங்கி மற்றும் வலைத்தள கணக்குகள் முடக்கப்படும். 

போதைக்காளான், கஞ்சா பயன்படுத்துபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடந்த சில மாதங்களில் மட்டும் போதை காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 300 கிராம் போதை காளான், மூன்று கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 peoples arrested for drugs mushroom sales in kodaikanal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->