மயக்கம் போட்டு சுருண்டு விழுந்த 73 ஆசிரியர்கள்! சென்னையில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 4000 மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலை சம ஊதியம், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திய ஆசிரியர்கள் தற்பொழுது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல அரசு பள்ளி ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை சுமார் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிறகு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 13-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்ததால் பள்ளிக்கல்வித்துறையின் டிபிஐ வளாகத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

போராட்டத்தில் ஈடுபட்ட வரும் அரசு பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

73 govt school teachers fell unconscious in hunger strike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->