தப்பி ஓடியவர்களை மடக்கிபிடித்த போலீஸ்! தருமபுரியில் சிக்கிய 760 கிலோ குட்கா! - Seithipunal
Seithipunal


தருமபுரி : கர்நாடகாவிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை தமிழ்நாட்டிற்கு டெம்போவில் கடத்திவரப்பட்ட  760 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்களுக்கான தடையை மேலும் ஓர் ஆண்டுகளுக்கு நீட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில்  குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைகூறியது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் காரிமங்கலம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பெங்களூர் பதிவேடு கொண்ட டெம்போ வேன் சேலம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. டெம்போவை  போலீசார் நிறுத்தினர்.

அப்போது அதிலிருந்து டிரைவர் உட்பட இரண்டு பேர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் கேத்மாரனாஅள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என தெரிய வந்தது.

அதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா புட்களை கடத்திய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடை கொண்ட 68 மூட்டகளில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ மற்றும் குட்காப்புகளை பரிந்து செய்து தப்பி ஓடிய கர்நாடக சாஷாங் என்பவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

760 kg gutka caught in Dharmapuri


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->