தஞ்சாவூர் அருகே பரிதாபம்.! வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார்கோட்டை பல்லாகுளம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் காவியா (8) அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை காவியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது வீட்டின் சுவர் திடீரென இடிந்து காவியாவின் தலைமீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 year old girl died after the house wall collapsed in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->