நடுக்கடலில் சிக்கிய 80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தூத்துக்குடியில் பரபரப்பு..!
80 crores drugs seized in thoothukudi
தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக புகையிலை, பீடி, போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படுவதும் வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி அவர்கள் விரைந்துச் சென்று நடுக்கடலில் கப்பலைச் சுற்றி வளைத்து போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப் பொருள் 30 கிலோ சிக்கி உள்ளதாகவும், இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
80 crores drugs seized in thoothukudi