கோவிலுக்கு சென்ற சென்னை குடும்பத்தினர்... வீட்டிற்கு வந்தபோது அதிர்ச்சி.! சென்னையில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து கோவிலுக்கு சென்ற ஜெயசீலன் குடும்பத்தினர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 80 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து எண்பது போல் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

80 pound jewelery robbery in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->