வீல் வீலென்று பசியில் பாலுக்கு அழுத பிள்ளை.. விஷம் வைத்த தந்தையால் சோகம்.!
A 14 month old child tragic victim of a husband who poisoned children due to his anger on his wife
திருப்பத்தூர் அருகே 14 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கிழக்கு பதனவாடி பகுதியைச் சார்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி சத்யா இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். சிவக்குமார் டிராக்டர் வைத்த ஊரில் விவசாய பணிகளை செய்து வந்துள்ளார்.
கடன் பிரச்சனை காரணமாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் தனது மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். மற்ற இரண்டு குழந்தைகளுடன் தனது வீட்டில் இருந்திருக்கிறார் சிவகுமார்.
அப்போது தனது 14 மாத கைக்குழந்தை ஒன்று பசியால் அழுததால் அந்தக் குழந்தையின் பசியை போக்க தெரியாமல் அதற்கு விஷம் கலந்து கொடுத்துள்ளார். மேலும் இன்னொரு மகளுக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷத்தை சாப்பிட்டு இருக்கிறார். அந்தக் குழந்தை விஷத்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததால் பயந்துபோன இவர் தனது அண்ணனை தொடர்பு கொண்டு உள்ளார்.
தனது அண்ணனிடம் மனைவியின் மீது இருந்த கோபத்தால் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தியதாக தெரிவித்துள்ளார். உடனே அவரது அண்ணன் வந்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இச்சம்பவத்தில் 14 மாத குழந்தை மட்டும் பரிதாபமாக உயரிழந்து விட்டது. சிவகுமாரும் அவரது இன்னொரு மகளும் தீவிர சிகிச்சை பெற்றுள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
A 14 month old child tragic victim of a husband who poisoned children due to his anger on his wife