சேலம் அருகே பரிதாபம்.! குட்டையில் மூழ்கி 3 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் குட்டையில் மூழ்கி மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் துர்கா. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து துர்காவின் மகன் கனிஷ்(3), துர்காவின் தாய் மோகனாம்பாள் பராமரிப்பில் இருந்தான். இந்நிலையில் பெரியகவுண்டாபுரம் அருகே உள்ள தோட்டத்தில் கனிஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த பண்ணை குட்டையில் தவறி விழுந்துள்ளான்.

இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மோகனாம்பாள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை கனிஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 3 year old child died after drowning in a puddle in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->