கோவை: சாக்கடையில் பிணமாக கிடந்த பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் சாக்கடையில் பிணமாகக் கிடந்த ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள சாக்கடையில் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சாய்பாபா காலனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தை பிறந்து சில மணி நேரமேயான நிலையில் சாக்கடையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், பிறந்து சில மணி நேரமேயான ஆன் குழந்தையை வீசி சென்றது யார்? குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A baby found dead in a drainage in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->