முன்னாள் காதலனை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மாணவி.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் காதலனை நண்பர்களுடன் சேர்ந்து மாணவி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார் அருகே மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (23). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அணக்கரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெஸ்லின் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் பிரவின் தான் கொடுத்த அனைத்து பரிசு பொருட்களும் திருப்பி தர வேண்டும் என ஜெஸ்லினிடம் கேட்டுள்ளார். இதனால் பிரவின் மீது கோபம் கொண்ட ஜெஸ்லின் பரிசு பொருட்களை தருகிறேன் வேர்கிளம்பி வா என்றுள்ளார்.

இதனை நம்பி பிரவின் வேர்கிளம்பி சென்றுள்ளார். அப்பொழுது அங்கு மறைந்து நின்றிருந்த ஜெஸ்லின் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் சேர்ந்து சரமாரியாக பிரவினை தாக்கி யுள்ளனர். இதனால் பிரவீன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.

இதைப் பார்த்த ஜெஸ்லின் மற்றும் ஆண் நண்பர்கள் 2 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்த பிரவினை தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பிரவின் கொற்றி கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ஜெஸ்லின், ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ்(30), அணக்கரை பகுதியை சேர்ந்த ஜெனித்(20) ஆகிய மூன்று பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A college girl who attacked her ex boyfriend with her friends in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->