யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது..திருமண நாளில் 4 வயது மகனை பறிகொடுத்த தம்பதி! - Seithipunal
Seithipunal


சென்னை மணலியின் திருமண நாளை கொண்டாட தனது 4 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிப்பர் லாரி மீது மோதி மகன் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பூங்கோதை மற்றும் அவரது நான்கு வயது மகன் நிஷாந்த் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.

சேகர் மற்றும் பூங்கோதை ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக 4 வயது மகன் நிஷாந்த் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தால் டிப்பர் லாரி மீது மோதியதில் மகன் நிஷா சம்பவ இடத்திலே பலியாகி உள்ளார்.

விபத்தை நேரில் கண்ட சாலையில் பயணித்த சேகர் மற்றும் பூங்கோதை மீட்டி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையோரத்தில் டிப்பர் லாளியை நிறுத்தி வைத்திருந்த ராளி ஓட்டுனர் ஸ்ரீதர் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

திருமண நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டிப்பர் லாரி மீது மோதி 4 வயசு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A couple lost their four year old son on their wedding day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->