உளுந்தூர்பேட்டை அருகே பெரும் சோகம்!...தண்டவாளத்தில் தலைவைத்து 2 பேர் தற்கொலை!
A great tragedy near ulundurpet 2 people committed suicide by hanging on the rail
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் அவா் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த நபர் தலை துண்டித்து சம்பட இடத்திலேயே பலியானார்.
இது தொடர்பாக விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து முகமது ரபீக் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற மற்றொரு ரயில் மோதியதில் அவர் தலை துண்டாகி உயிரிழந்தார். இவர் யார் என்பது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A great tragedy near ulundurpet 2 people committed suicide by hanging on the rail