ச்சீ.. நீயெல்லாம் ஒரு அப்பாவா.? 19 வயது மகள் குளிப்பதை வீடியோ எடுத்த தந்தை... புகார் அளித்த தாயார்.! - Seithipunal
Seithipunal


தனது மனைவியின் இளம் மகள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் தனது கணவரை பிரிந்து 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 19 வயது மகளுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தற்செயலாக தனது கணவரின் செல்போனை எடுத்து பார்த்த பெண்ணிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அந்த வாலிபர் தனது 19 வயது மகள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து அவரது  செல்போனையும் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினார். தனது மனைவியின் மகள் குளிப்பதை தந்தை ஸ்தானத்தில் இருந்த நபர் செல்போனின் மூலம் வீடியோ எடுத்து ரசித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man who took video of his wife daughter while she bath police arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->