மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! - Seithipunal
Seithipunal


மருத்துவ கல்லூரி மாணவி காஞ்சிபுரம் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் அங்கேயே உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று இரவு மாணவி ஒருவர் விடுதியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதிப்பதற்காக நின்றுள்ளார். அங்கு இதைப் பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அதற்குள் அந்த மாணவி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவியை அங்கு இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி என்பதும், அவர் எம்.பி.பிஎஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A medical college student committed suicide by jumping from the floor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->