குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.!
A person suicide due to family problem in madurai
குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன்(32). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த நிரஞ்சன் நேற்று திருப்பரங்குன்றம்- விளாச்சேரி சாலையில் உள்ள தென்னந்தோப்பு அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிரஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person suicide due to family problem in madurai