தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து..ஒருவர் உயிரிழப்பு!
A private bus and a minivan collided headon One person has died
ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே மதுரையில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்,
இடிபாடுகளில் சிக்கி, லோடு வேன் ஓட்டுநர் , ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் (45) படுகாயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு , 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் தனியார் பேருந்தில் வந்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடனும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையின் மையத்தில் நடைபெற்ற விபத்தால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A private bus and a minivan collided headon One person has died