கோயம்புத்தூர் : பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர் அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிவசக்தி ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பல்லடம் சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவ சக்தி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி படிக்கட்டு வழியாக கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தின் கதவு இருந்தும் பூட்டாமல் இருந்ததால் தான் சிவசக்தி இருந்ததாகக் கூறி பேருந்து ஓட்டுனரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கணவர் சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A teenager died after falling from a bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->